• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘ஜன நாயகன்’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘ஜன நாயகன்’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/08
in ஆசிரியர் தெரிவு, சினிமா, பல்சுவை
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ரசிகர்களின் பெருத்த அவளுக்கு மத்தியில் நாளையத்தினம் வெளியாகவிருந்த விஜயின் இறுதி திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவருகின்றது.

இந்நிலையில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு தணிக்கைகுழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு (09) ஒத்தி வைத்தது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் வெளியாகும் திகதியை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

இதனால் ஆவலுடன் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த பதிவில், “அன்புள்ள விஜய் அண்ணா, இந்த பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையே நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட 39-க்கும் அதிகமான நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, விநியோகஸ்தர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளைக்குள் (09)  தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை நேற்று (7) நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்த நிலையில் தணிக்கை சபையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும்.

இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை சபை தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.

ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர்.

சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது.

இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளைக்குள் (09) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (09) தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Related

Tags: Actor VijayCinemaJana Nayagan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

Next Post

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வி.

Related Posts

தளபதி விஜய்யின் முடிவு தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தின் நிறைவு!
சினிமா

‘ஜன நாயகன்’ படம் தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணை!

2026-01-12
தோல்வியில் முடிவடைந்த இஸ்ரோவின் PSLV-C62 திட்டம்!
சினிமா

தோல்வியில் முடிவடைந்த இஸ்ரோவின் PSLV-C62 திட்டம்!

2026-01-12
ஜனநாயகன் சான்றிதழ் விவகாரம்; இந்திய உயர் நீதிமன்றை அணுகிய தயாரிப்பாளர்கள்!
சினிமா

ஜனநாயகன் சான்றிதழ் விவகாரம்; இந்திய உயர் நீதிமன்றை அணுகிய தயாரிப்பாளர்கள்!

2026-01-12
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?

2026-01-12
ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

2026-01-12
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!
ஆசிரியர் தெரிவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

2026-01-12
Next Post
நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர  முயற்சிகள் தோல்வி.

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வி.

இலவச பாடசாலை சீருடைகள் குறித்து வெளியான தகவல்

இலவச பாடசாலை சீருடைகள் குறித்து வெளியான தகவல்

லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

0
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.