ஆசிய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்ட பல அணிகள் போட்டியிடும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் (ALL) தொடர் எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி முதல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் சிறப்பம்சமாக, இலங்கையின் முன்னாள் ஜாம்பவான்களை உள்ளடக்கிய ‘இலங்கை லயன்ஸ்’ அணி களமிறங்கவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து விளையாடவுள்ளமையினால் இந்த போட்டி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான குறித்த அணியில், உபுல் தரங்க, அஜந்த மெண்டிஸ், சீக்குகே பிரசன்னா, சாமர கபுகெதர, தனுஷ்க குணதிலக உள்ளிட்ட முன்னாள் இலங்கை வீரர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



















