இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருசவிதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதன்போது நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 30 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த காணி வழக்கு ஒன்றின் தீர்ப்பின்படி, காணியின் உரிமையை முறையாகக் கையளிப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.













