• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/12
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter
யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது, என அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார்.

வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்  நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்து ஆளுநர் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது.

இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட,

இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: JaffnaSri Lanka Customs Departmentசீவலி அருக்கொடநேரடி ஏற்றுமதிvவடக்கு மாகாண ஆளுநர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

Next Post

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Related Posts

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!
இலங்கை

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

2026-10-12
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-12
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

2026-10-12
Next Post
இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

தளபதி விஜய்யின் முடிவு தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தின் நிறைவு!

'ஜன நாயகன்' படம் தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணை!

தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

14 வயது சிறுவனின் மர்ம மரணம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

0
புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

0
பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

0
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

0
AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

2026-10-12
புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

2026-10-12
பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: