கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அறிமுகம் செய்து கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நஜ்முதீன் நபீஸ், மர்ஹூம் றபாய்தீன் சப்னாஸ், முஹம்மத் நவாஸ் அஷ்பாக் அகமட் , ஹாரூன் முகம்மட் சப்ரி ஆகியோர் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நற்பிட்டிமுனை ஜாமிஉல் ஹிக்மா சார் பள்ளிவாசல்கள் கூட்டமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ. எல்.நாஸிர் கனி (ஹாமி) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல், ஆஷுர் பஸார் பள்ளிவாசல் மற்றும் றாஜிஹி பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகிகள், இமாம்கள், புதிய உலமாக்களின் உறவினர்கள் அடங்கலாக பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



















