பல ஆண்டுகளாக புனரமைப்பு இல்லாததால் பழுதடைந்திருந்த நிலையில் ஹட்டன் காமினிபுர பிரதான வீதியை மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் இன்று தொடங்கியது.
ஹட்டன் SLTB டிப்போவிலிருந்து மாநகர சபை பாலம் வரையிலான வீதியைகுடியிருப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு நீண்டகால போக்குவரத்து சிரமங்களைத் எதிர் நோக்கி வந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி பணி இடத்தை ஆய்வு செய்து மக்களின் தேவைகளுக்காக திட்டத்தை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த திட்டம் அரசாங்கத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.















