புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளில் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












