அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் இருந்த இரு பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அஹங்கம தித்தகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












