பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும்.
இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்துவதே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து, அதன் கொம்புகளுக்கு அழகாக வண்ணம் தீட்டி, மாலைகள் அணிவித்து, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, அங்கு பொங்கலிடுவார்கள்.
பொங்கல், பழங்கள் போன்றவற்றை மாட்டிற்கு படைத்து, வழிபடுவார்கள்.

















