சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் எம். றிஸ்லி முஸ்தபா வழங்கினார்.
பாடசாலை அதிபர் கே.எல்.அப்துல் ஜொளபர் தலைமையில்நடைபெற்ற ஒன்றுகூடலின் போது, குறித்த LED மின்குமிழ் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், மயோன் குழும உறுப்பினர்கள் ஏ.எல்.எம். நியாஸ், எச்.எம்.ஸிஹாப், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பும் கல்விச் சூழலின் மேம்பாடும் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும், தொடர்ச்சியாக பாடசாலைக்காக பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வரும் எம். றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கு, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.













