நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றையதினத்தில் 882 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் அடிப்படையில், போதைப்பொருள் தொடர்பில் 882 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், 09 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார்.
அதன்படி, குறித்த நபர்களிடம் இருந்து 400 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 11 கிராம் ஐஸ், 500 கிராம் கொக்கெய்ன், 03 கிலோகிராம் 247 கிராம் கஞ்சா, 88,050 கஞ்சா செடிகள், 10 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 32 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 2,663 போதை மாத்திரைகள், 02 கிலோகிராம் 491 கிராம் மதனமோதகம் மற்றும் 550 கிராம் மாவா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த போதைப்பொருட்களை வைத்திருந்த 882 சந்தேக நபர்களுடன் தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 879 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.













