இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு புரட்சிகரமான அதே சமயம் சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood)) தலைமையிலான இந்த சீர்திருத்தங்கள் தற்போதைய காவல் அமைப்பையே மாற்றியமைக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெரும்பாலும் மாவட்ட அடிப்படையில் 43 காவல் படைகள் இயங்கி வருகின்றன.
இந்த எண்ணிக்கையை வெறும் 12 பிராந்திய காவல் படைகளாக குறைப்பதற்கு உள்துறைச் செயலாளர் பரிசீலித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையானது நிர்வாகத் திறனை மேம்படுத்த எடுக்கப்படுவதாகக் கருதப்பட்டாலும் அடிமட்ட நிலை காவல்துறை அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன
















