துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (20) மீகலேவ, சியம்பலங்காமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் முன்னர் T-56 துப்பாக்கியை வைத்திருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டும் உள்ளார்.
அவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.











