பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட கட்டிடத்தின் 03 தளங்களிலும் தீ பரவியது.
இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான பொலிஸ் திணைக்கள டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவிக்கையில்,
ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர 03 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது.
ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.















