அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வதுகெதர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இந்த ஆயுதத்தை மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














