முன்னனி லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான எஸ்.ஏ டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
எஸ்.ஏ. டி20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடாத்தன.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ஓட்டங்களை குவித்து அசத்தினார். சன்ரைசர்ஸ் சார்பில் மார்கோ யன்சன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் 159 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 162 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஒரு கட்டத்தில் 48 ஓட்டங்கள் பெறுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இணைந்த மேதிவ் மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். மேதிவ் 68 ஓட்டங்களையும், ஸ்டப்ஸ் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது டிவால்ட் பிரேவிசுக்கும், தொடர் நாயகன் விருது டி கொக்குக்கும் வழங்கப்பட்டது.



















