பிக்பெஷ் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பேர்த் ஸ்கொர்ச்சர்ஸ் அணி 6வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்த குறித்த தொடரின் இறுதிப்போட்டிக்கு சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பேர்த் ஸ்கொர்ச்சர்ஸ் அணிகள் தகுதிப்பெற்றிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றிருந்த பேர்த் அணி பந்துவீச்சினை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் பிலிப், ஹென்ரிக்ஸ் ஆகியோர் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பெர்த் ஸ்கார்சர்ஸ் சார்பில் டேவிட் பைன், ஜேய் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதையடுத்து 133 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டினை இழந்து 133 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றுடன். 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை பெர்த் ஸ்கார்சர்ஸ் பெற்றது.
ஆட்ட நாயகன் விருது டேவிட் பைனுக்கும் தொடர் நாயகன் விருது சாம் ஹார்பருக்கும் வழங்கப்பட்டது.



















