இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் குறித்து இலங்கை உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சகா விஜேமுனி வலியுறுத்தினார்.
இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் எழுந்தால் தேவையான அனைத்து பரிசோதனை கருவிகளும் நாட்டில் கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய நிபா வைரஸ், பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளது.
இதனால் தாய்லாந்து, சிங்கப்பூர், ஹெங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை உள்ளது என்றும் அவர் கூறினார்.













