வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றத்தில் ஒத்துழைக்க பாகிஸ்தானும் இலங்கையும் புதன்கிழமை (28) தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவை நிறுவின.
கொழும்பில் நடைபெற்ற கூட்டுப் பொருளாதார ஆணையத்தின் (JEC) 13 ஆவது அமர்வின் போது, இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.
பாகிஸ்தான் தூதுக்குழுவிற்கு பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஹாரூன் அக்தர் கான் தலைமை தாங்கினார்.
இரு நாடுகளும் பல துறைகளில் நீண்டகால இருதரப்பு உறவைக் கொண்டுள்ளன.
மேலும் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், முன்னேறிச் சென்று மேம்பட்ட மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புகளை வளர்ப்பது காலத்தின் தேவை என்றும் குறிப்பிடப்பட்டது.
தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இலங்கை, பாகிஸ்தானிய மருந்து நிறுவனங்களை முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இதன்போது அழைப்பு விடுத்தது.

















