சாண்ட்ரா புயலைத் (Storm Chandra) தொடர்ந்து தென்மேற்கு இங்கிலாந்தில் பலத்த மழைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ (Yellow Warning) விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது கார்ன்வால் (Cornwall), டெவோன் (Devon), டார்செட் (Dorset) மற்றும் சோமர்செட் (Somerset) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
வானிலை ஆய்வாளர் ஜொனாதன் வௌட்ரே (Jonathan Vautrey) கூறுகையில், இன்று மதியத்திலிருந்து மழை மேகங்கள் படிப்படியாக வடக்கு நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பகுதிகளில் 10 முதல் 20 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்
அதிகப்படியான மழை குறிப்பாக டார்ட்மூர் (Dartmoor) பகுதியில் 50 முதல் 60 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



















