கிரிபத்கொடை பகுதியில் நேற்று (03) மாலை (03) மூன்று கிலோ 18 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மற்றொரு சந்தேக நபரும் களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிரிபத்கொடை மருத்துவமனை சாலையில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், போதைப்பொருள் இருப்பை வழங்கிய மற்றொரு நபர் பற்றிய தகவல்கள் தெரியவந்தது.
அதன்படி, இரண்டாவது சந்தேக நபர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது சந்தேக நபர் 32 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவரும் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















