நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையில் பட்டதாரிகளையும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, பொது சேவையில் பட்டதாரிகள் ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நாளை (05) காலை 09.00 மணிக்குத் தொடங்கி பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை திறந்திருக்கும்.
இதற்கிடையில், அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஆண் மற்றும் பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் பெப்ரவரி 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் மட்டுமே திறக்கப்படும், மார்ச் 5 ஆம் திகதி காலை 9 மணிக்கு முடிவடையும்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.














