மாண்டெல்சன் தொடர்பான கோப்புகளை நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) உள்ளார்.
அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராக பீட்டர் மாண்டெல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான கோப்புகளை, நாடாளுமன்றத்தின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவிடம் (ISC) ஒப்படைக்க பிரதமர் கீர் ஸ்டார்மர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தொழிற் கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய பாதுகாப்பு அல்லது சர்வதேச உறவுகள் தொடர்பான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாது என்று அமைச்சர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், தொழிற் கட்சியின் மூத்த எம்பிக்களான ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) மற்றும் மேக் ஹில்லியர் (Meg Hillier) ஆகியோரின் வெளிப்படையான தலையீட்டைத் தொடர்ந்து, அரசாங்கம் இப்போது தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளது.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு அல்லது சர்வதேச உறவுகள் தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவின் (ISC) பார்வைக்கு அனுப்பப்படும்.
இந்த இரண்டு துறைகளுக்கும் தொடர்பில்லாத இதர கோப்புகள் அரசாங்கத்தால் வெளியிடப்படும்.
இதேவேளை, இந்தத் திருத்தத்திற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















