சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெர்மன் தத்துவஞானியும் சோசலிச சிந்தனையாளரும் மற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியுமான மாமேதை கார்ல் மார்க்ஸின் வெண்கல திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6) திறந்துவைத்தார்.
கார்ல் மார்க்ஸின் கருத்துக்கள் மற்றும் தத்துவத்தைப் பரப்பும் நோக்கத்துடன், அரசு அருங்காட்சியகத்தை ஒட்டியுள்ள கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் கார்ல் மார்க்ஸுக்கான சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டன.
சுமார் பத்து மாதங்களுக்குப் பின்னர் சிலை கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
















