பிரித்தானியாவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், இங்கிலாந்துக்கு 80க்கும் மேற்பட்ட பெருவெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தென்மேற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் பெருவெள்ள பாதிப்பு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெருவெள்ளம் தொடர்பில் 253 எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் நிலையில் North Yorkshire முதல் Cornwal வரையிலும், வேல்ஸ் எல்லைகள் முதல் Norfolk வரையிலும் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வேல்ஸ் நாட்டுக்கென ஏற்கனவே தனியாக 11 பெருவெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது


















