மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ,கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்றும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















