புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவிற்காக டாக்காவிற்கு விஜயம் செய்த இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, பங்களாதேஷின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தாரிக் ரஹ்மானை சந்தித்தார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதன்போது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக மருந்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் கவனம் செலுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக பிரதமர் ரஹ்மானின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.















