அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு அமைவாக, ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான எதிர்காலத் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (19) இரவு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானுடனான போரில் ட்ரம்ப்பை இழுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நெதன்யாகு நிராகரித்தார்.
ஜெருசலேம் மற்றும் ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் வெடிச்சத்தங்கள் கேட்டன – தனது உள்கட்டமைப்பு மீது மேலும் தாக்குதல்கள் நடந்தால், தெஹ்ரான் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் முன்னதாக எச்சரித்திருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கடந்த சில மணிநேரங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரானின் ஆக்கிரமிப்பே காரணம் என ஐக்கிய அரபு அமீரகமும் பஹ்ரைனும் கூறியுள்ளன.
கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் வளைகுடா அரபு நாடுகளில் உள்ள எரிசக்தி நிலையங்களைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கி வருகிறது.
ஆனால், புதன்கிழமை ஈரானின் மிகப்பெரிய எரிவாயு தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், அரபு நாடுகள் கடுமையாகத் தவிர்க்க முயன்ற அதே பதற்ற அதிகரிப்பைத் தூண்டிவிட்டது.
ஈரான் எரிசக்தி தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக தெஹ்ரான் கட்டாரின் ராஸ் லஃபான் எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலை அரங்கேற்றியது.
இது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையை கடுமையாக உயர்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.


















