ஐபிஎல் போட்டிகள் வரும் 28-ம் திகதி முதல் 31-ம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் இறுதிச்செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சம் கரன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மாற்றாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க உள்வாங்கப்பட்டுள்ளார்.இதனை உத்தியோகப்பூர்வமாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த சானக்க இம்முறை ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில் தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிபிடதக்கது.

இதேவேளை ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியுள்ளார்.
கொல்கத்தா அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஏற்கெனவே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரஹான ஆகாஷ் தீப்பும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.












