• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin வலியுறுத்தினார்.

இந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக இங்கு குறிப்பிட்ட ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், வலுசக்தி துறையில் மட்டுமன்றி தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் போன்ற எவ்வகையிலான ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் உதவிகள் அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்திலும்கூட, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ரஷ்யா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழங்கும் ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக கலாசார உறவுகளையும், சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பிரதி அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு காரணமாக அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

No photo description available.

May be an image of text

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan,  ரஷ்ய வலுசக்தி அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் Vladimir Khazov, பெட்ரோலியம் சார்ந்த சேவை வர்த்தக திட்ட அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதித் தலைவர் Sergey Rodin உள்ளிட்ட ரஷ்ய தூதுக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

 

 

 

Related

Tags: anura kumara dissanayakeMiddle East conflict.Roman MarshavinRussia
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
Next Post
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.