காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (05) பதிவாகியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் அனுராதபும், எப்பாவல மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் பதிவானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகோலே பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் எப்பாவல 36, 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அமுனுகோலே குளக்கரை அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
மற்றைய நபர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் நெல் வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனிடையே, மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெவகெதர பகுதியில் பதிவான மற்றொரு சம்பவத்தில் தனது இல்லத்தின் முன்பாக காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான அவர், படுகாயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவங்கள் தொடர்பாக எப்பாவல மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












