இன்று (09) அதிகாலை சுமார் 12.15 மணியளவில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகில் உள்ள திஸ்ஸமஹாராம–மாத்தறை பிரதான சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
திஸ்ஸமஹாராமை – மாத்தறை பிரதான வீதியின், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2 ஆவது நுழைவாயில் மற்றும் துறைமுக பொலிஸ் நிலையம் அருகே இன்று (09) அதிகாலைகாலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கனரக வாகனத்துடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்து நடத்துனரும் ஒரு பயணியும் காயமடைந்த நிலையில், பொலிஸார் இரு வாகனத்தின் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













