ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி (RCB) அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் தனது தோல்வியுறாத பயணத்தைத் தொடர்ந்து 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியில் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பங்கு மிக முக்கியமானது.
தொடக்க வீரராகக் களம் இறங்கிய அவர், ஆர்சிபியின் வெறும் 26 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசிய அவர், தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை பதிவுசெய்தார்.
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்சிபி அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், வைபவ் குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார்.
“அவர் விளையாடும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது எனவும் அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடுகிறார் எனவும் 15 வயது சிறுவனுக்குரிய முதிர்ச்சியைத் தாண்டி, அவர் மிகவும் முதிர்ச்சியுடன் (Mature) விளையாடுகிறார் எனவும் அவரது சிறப்பான ஆட்டத்திற்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



















