உலகக் கிண்ணத்தில் உள்ள பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியை ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தவறாகக் கையாண்டதன் காரணமாக, அவரது மறுதேர்வுக்கான ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
மூன்று கூட்டமைப்புகளால் நிராகரிக்கப்பட்டு பரவலான எதிர்ப்பைச் சந்தித்த அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக இன்ஃபான்டினோ கடந்த வாரம் அறிவித்தார்.
இருப்பினும் இதனால், ஃபிஃபா (FIFA) அமைப்பின் தலைவராக அவர் வகிக்கும் பத்தாண்டு காலப் பதவிக்காலம் தீவிர விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஃபிஃபா தலைமைப் பெறுப்பிற்கான தேர்தலில் இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு அளித்து வந்த ஆதரவை அதிகாரப்பூர்வமாக விலக்கிக்கொண்ட முதல் கால்பந்து சங்கமாக வேல்ஸ் கால்பந்து சங்கம் (FAW) மாறியுள்ளது.
இது குறித்து வேல்ஸ் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2027–2031 காலகட்டத்திற்கான ஃபிஃபா தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனுவிற்கான ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் திரும்பப் பெறுவதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















