நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது.
குறிப்பாக, பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட தெருநாய்களை, கருத்தடை செய்த பின்னர், அதே இடங்களில் விடக்கூடாது என்ற தனது உத்தரவைத் திரும்பப் பெற நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அவற்றுக்குத் திசைமயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, மேலும் பல தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று விலங்குரிமை ஆர்வலர்கள் வாதிட்டிருந்தனர்.
இருப்பினும், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை ஏற்க மறுத்து, பொது இடங்களில் தெருநாய்கள் இருப்பது கவலைக்குரியது என்று குறிப்பிட்டது.
அந்த விலங்குகள் மக்களை, குறிப்பாக குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்களை தங்களால் புறக்கணிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
அதேநேரம், முந்தைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக மாநில அரசுகளையும் நீதிமன்றம் விமர்சித்தது.















