தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, எரிபொருள் நிறுவனங்கள் இன்று (19) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 90 பைசா வரை உயர்த்தின.
வெள்ளிக்கிழமை (மே 15) அன்று லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் இந்த விலை உயர்வு வந்துள்ளது.
முந்தைய விலை உயர்வுகளைத் தொடர்ந்து, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77-லிருந்து ரூ.97.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.67-லிருந்து ரூ.90.67 ஆகவும் உயர்ந்தது.
தற்போது, மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்தைத் தொடர்ந்து, தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை மேலும் 87 பைசா அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.98.64-க்கு விற்கப்படுகிறது.
டெல்லியில் டீசல் விலையும் 91 பைசா அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.91.58-ஐ எட்டியுள்ளது.













