உள்ளூர் சந்தையில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (20) உறுதிப்படுத்தினர்.
அண்மைய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பாக்கெட்டின் விலை 50 ரூபாவினால் உயர்ந்துள்ளது.
அதேநேரம், ஒரு கிலோ கிராம் பால்மா பாக்கெட்டின் விலை 125 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.














