ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதிநிலைமைகள் குறித்து ஸ்கொட்லாந்து காவல்துறை நடத்தி வரும் விசாரணைகளுக்கு 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரந்த இந்த விசாரணை ஏற்கனவே பல முக்கியப் பிரமுகர்களின் கைது நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதி ஆதாரங்களைக் கண்காணிப்பதற்காக 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் பிரான்ச்ஃபார்ம்’ (Operation Branchform) நடவடிக்கையானது, தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த புள்ளி விபரங்களின்படி 2026 ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் இந்த விசாரணைக்காக 2,173,089 பவுண்டுகள் தொகை செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை தொடங்கியதிலிருந்து, அதன் மொத்த செலவில் 100,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகை குறிப்பாக 100,498 பவுண்டுகள் அதிகாரிகளின் மேலதிக நேரப் பணிக்காகச் செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் ஓய்வூதியப் பங்களிப்புகள் அல்லது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் ஏற்பட்ட செலவுகள் சேர்க்கப்படவில்லை.
இந்த விசாரணையில் சிக்கியவர்களில், கட்சியிலிருந்து சுமார் 460,000 பவுண்டுகளை முறைகேடாக கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் முன்னாள் தலைமை நிர்வாகியான பீட்டர் முரெலும் (Peter Murrell) அடங்குவார்.
அவரை திங்கட்கிழமை (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.















