• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

Hanushya P by Hanushya P
2026/06/12
in சினிமா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது

‘ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ் மற்றும் டிகே கதையை உருவாக்க திகந்த் மற்றும் குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.தொடக்கத்தில் சமந்தா தனது காதலரின் வீட்டுக்குள் நுழைவது போல் காட்டப்படுகிறது. அங்குள்ள குடும்பத்தினர் அவரிடம் ‘உன்னை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?’ ‘உன் பெயர் என்ன?’ ‘எந்த ஊர்?’ என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கின்றனர். தொடர்ந்து அவரிடம் சாதி சமையல் கலை மற்றும் உடன்பிறந்தவர்கள் குறித்து குற்றவாளியை விசாரிப்பது போல் கேள்விகளை எழுப்புகின்றனர். அந்த வீட்டின் மருமகள் ஒருவரை ‘மா இண்டி பங்காரம்’ (எங்கள் வீட்டுத் தங்கம்) என்று கொண்டாடுகின்றனர்.

இதையடுத்து வாய்ஸ் ஓவரில் பேசும் சமந்தா ‘ஒரு சிறந்த மருமகளாக இருக்க அழகு, அடக்கம், சமையல், பாட்டு என பல தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு அப்படி எதுவும் தெரியாது. ஆனால் என் உயிரை பணயம் வைத்தாவது என் குடும்பத்தை நான் காப்பேன்’ என்று ஆவேசமாக பேசுகிறார். அதன் தொடர்ச்சியாக சேலையில் சமந்தா எதிரிகளை பறக்கவிட்டு அடிக்கும் சண்டைக் காட்சிகள் ட்ரெய்லரை ஆக்கிரமிக்கின்றன. அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ப்ளாஸ்ட்’ படத்தின் சண்டைக் காட்சிகளை இப்படத்தின் ட்ரெய்லரில் வரும் காட்சிகள் நினைவூட்டுகின்றன. அப்படத்தைப் போலவே இதன் ஆக்‌ஷன் காட்சிகள் தியேட்டரில் ‘ப்ளாஸ்ட்’ ஆகும் என்று நம்பலாம்.

ஒரு முன்னாள் கேங்ஸ்டர் தனது பழைய வாழ்க்கையை விட்டு விலகி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழும் படங்கள் ஆண்களின் பார்வையில் பலமுறை சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணை சுற்றி சொல்லப்படுவது சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. வரும் ஜூன் 19 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related

Tags: directed by Nandini Reddyreleasedsamanthatrailer of 'Maa Indi Bangaram'
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

Next Post

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

Related Posts

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!
ஆசிரியர் தெரிவு

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!
சினிமா

2026-06-08
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

2026-06-05
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

2026-06-04
வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !
சினிமா

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

2026-06-01
285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!
சினிமா

285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

2026-06-01
Next Post
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

0
ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

0
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

0
வருண ஜயசுந்தர விவகாரத்தில் கைது நடவடிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை

எதிர்க்கட்சியின் கடிதம் சபாநாயகரிடம் கையளிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.