பிரிட்டன் வரலாற்றில் முதன்மைறையாக , தனது தனிப்பட்ட வருமானம் மற்றும் அதற்காகத் தான் செலுத்திய வரி விபரங்களை நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்தவுள்ளதாக மூன்றாம் சார்லஸ் மன்னர் (King Charles III) அறிவித்துள்ளார்.
இதன்மூலம் பிரிட்டன் அரச குடும்ப வரலாற்றிலேயே தனது வரி விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முதலாவது மன்னர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதேவேளை, மன்னரின் இந்த முடிவு குறித்து , 2024/25 நிதியாண்டில் மன்னர் செலுத்திய மொத்த வரி விபரங்கள், இந்த வார இறுதியில் அரச குடும்பத்தின் வருடாந்த நிதி அறிக்கையின் ஒரு பகுதியாகப் பிரசுரிக்கப்படும் எனவும் அரச குடும்பத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நிதி நிலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் விரிவான புரிதலை ஏற்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காகவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
சார்லஸ் அவர்கள் வேல்ஸ் இளவரசராக இருந்தபோதும் இவ்வாறான விபரங்களை வெளியிட்டிருந்தார். எனவும் தற்பொழுது நாட்டின் இறையாண்மையுள்ள மன்னராகப் பொறுப்பேற்ற பின்னரும், இந்த வெளிப்படைத்தன்மை மரபைத் தொடர வேண்டும் என்பது மன்னரின் தனிப்பட்ட விருப்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














