பிரிட்டனின் எடின்பர்க் நகரின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக 36 வயதுடைய நபர் ஒருவர் மீது ஸ்காட்லாந்து பொலிஸாரால் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்நகரம் முழுவதும் தொடர் வன்முறைகள் இடம்பெற்றன.
இந்தத் தாக்குதல்களில் 22 வயதுடைய இருவர், மற்றும் 24, 27, 39 வயதுகளையுடைய ஐந்து ஆண்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவர் அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவம் குறித்துப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தொடர் தாக்குதல்கள் அனைத்தும் முற்றிலும் “முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வினால்” தூண்டப்பட்டு நடத்தப்பட்டவையாகவே தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதுடைய சந்தேகநபர் மீதான முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஸ்காட்லாந்து பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.













