பிரிட்டனின் பெட்ஃபோர்ட் நகரில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவசரக்கால மீட்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டியுள்ளதுடன், அவர்களில் 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தற்போதைய நிலவரப்படி 28 பயணிகள் இன்னும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லண்டன் செயின்ட் பான்க்ராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டிங்ஹாம் (Nottingham) ரயில் சேவையானது தண்டவாளத்தில் நகராமல் ஒரே இடத்தில் நிலையாக நின்றுகொண்டிருந்துள்ள நிலையில்
நேற்று மாலை 5.15 மணியளவில் அதே பாதையில் வந்த கோர்பி (Corby) ரயில், எதிர்பாராத விதமாக நின்றுகொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியுள்ளது.
இதன்போது நின்றுகொண்டிருந்த ரயிலின் பெட்டி தண்டவாளத்தை விட்டு முழுமையாகத் தடம் புரண்டு வியத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியப் புலனாய்வு அதிகாரிகள் தற்பொழுது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













