• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (21) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கின்ற விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணையாகும்.

இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின்போது பாரிய மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை அவதானிக்க முடிகின்றது.

இந்த உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்கின்ற ஆர்வம் மக்கள் மத்தியிலும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், காணப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அகிய மூன்று ஜனாதிபதிகள் இருந்திருக்கின்றார்கள்.

அவர்களுடைய காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக உண்மைகள் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன. என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக கோதபாய ராஜபக்ச ஆட்சிக்கு வரும்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து சூத்திரதாரிகளும் உண்மைக்கு மத்தியில் கொண்டுவரப்படுவார்கள் என பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அதேவேளை தற்போதைய நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் நம்பிக்கை ஏற்படக்கூடிய விதத்தில் விசாரணைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விசாரணை பற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது.

பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை, அருட்தந்தை சிறில் காமினி போன்றவர்களும் இது சம்பந்தமான நம்பிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மனிதாபிமானத்தை நேசிக்கின்றவர்கள் மனித உரிமைகளை போசிக்கின்றவர்கள் மத்தியில் இந்த விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடிய எந்தவித சந்தர்ப்பங்களும் வழங்கக் கூடாது ஆனால் தற்போது குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில அடிப்படை வாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உளவுத்துறை பிரதானி ஒருவர் சுரேஸ் சாலி அவர்கள் விசாரணை விசாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்.

இவரே இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் என்கின்ற பல விடயங்கள் பல மட்டங்களில் பேசப்படுகின்றன.

குற்றம் இழைத்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பேரினவாதிகள் பாதுகாப்பதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் அப்பாவி மக்களின் உயிர்களை கொன்று குவித்த குற்ற செயல்களை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது உறுதியான நிலைப்பாடு. இதற்கு பிரதான எதிர் தொடர்ச்சியாக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட இந்த விடை இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

எனவே எதிர்கட்சிகளாக இருக்கின்ற அனைவரும் தாக்குதல் சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் நிறுத்த படுத்துவதற்குரிய விதத்தில் கருத்துக்களையும் தாக்கவர்களை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

செம்மணி சித்து பாத்தியில் இதுவரையும் 386 என்புக் கூடுகள் எடுக்கப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அம்மையார் இதை 1996 க்கு உட்பட்ட காலப்பகுதியில் இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்த புதைகுழியில் இருந்து பல வயது வித்தியாங்களுக்குட்பட்டவர்களின் என்பு கூடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

புத்தகப் பைகள் பாற்புட்டிகள் போன்ற ஆதார பொருட்களும் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே இது ஒரு இன அழிப்புக்கான சான்றாக அமைகின்றன.

குடும்பம் குடும்பமாக கொண்டு கொன்று வகைத்தொகை இல்லாமல் கொலை செய்திருக்கின்றார்கள்.

இந்த கொலை சம்பவம் அல்லது காணாமல் பட்டவர்கள் என்று நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றவர்கள் இப்போது மாதிரி போன்று செம்மணியில் சித்து பாத்தியில் புதைகுழியில் இருந்து அவர்களுடைய என்பு கூறுகள் சாட்சியகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இது மாத்திரமல்ல இன்னும் இந்த நாட்டில் பல புதைக்குள்ழிகள் உறைந்து கொண்டு இருக்கின்றன உண்மைகள் வரவேண்டும்.

இவ்வாறான விடயங்களை வெளிக்கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.

கிரிசாந்தி படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆயுட்காலத்தில் தண்டனை அனுபவிக்கின்ற சோமரெட்ண ராஜபக்ச என்கின்ற குற்றவாளி குறிப்பிட்டிருக்கின்றார் இந்த செம்மணியில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்க புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

எனவே அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கம் கையாளுகின்ற விடயத்தை நாங்கள் வரவேற்கின்றோம் ஆனால் குற்றவாளிகள் தப்பித்துச் செல்லக்கூடாது குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அக்கால ஆட்சியாளர்கள் இப்போது சில சில தந்திரங்களை கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related

Tags: chemmanisrilanka newsSrinesan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

Next Post

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !
இலங்கை

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் - வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

லண்டனில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செயற்பட்ட சம்பவத்தில் சிறுமி உட்பட 3 சிறுவர்கள் கைது!

லண்டனில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செயற்பட்ட சம்பவத்தில் சிறுமி உட்பட 3 சிறுவர்கள் கைது!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.