பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையான வீட்டுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும், நலிவடைந்து வரும் கட்டுமானத் துறையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் உடனடியாக அவசரக்கால நிதியுதவி மற்றும் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
பிரித்தானியாவில் தற்போது சுமார் 65 இலட்சம் வீடுகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த இடைவெளியை எதிர்வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் நிரப்ப வேண்டுமாயின், ஆண்டுதோறும் 5 இலட்சத்து 65,000 புதிய வீடுகள் கட்டப்பட வேண்டும்.
ஆனால் தற்போதைய கணிப்புகளின்படி, வரும் 2029 ஆம் ஆண்டில் கூட ஆண்டுக்கு வெறும் 3 இலச்சத்து 5,000 புதிய வீடுகளை மட்டுமே கட்ட முடியும் என்ற மந்தகதியான சூழ்நிலையே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே, அரசாங்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரும்பினால், நாட்டைப் பௌதிக ரீதியாகக் கட்டமைக்கும் இந்த நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவசரக்காலச் சலுகைகளை வழங்கி, வீடமைப்புத் திட்டங்களை ஊக்குவிக்க உடனடியாக முன்வர வேண்டும் எனப் பிரசாரக் குழுவினர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.














