தங்காலை, நகுலுகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு (11) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர், சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.
தங்காலை பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








