• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

Hanushya P by Hanushya P
2026/06/30
in இலங்கை, கொழும்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர் கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு எதிர்காலத்திலும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் நீடித்த முன்னேற்றத்தை உறுதிப்ப

blankடுத்த இலங்கை தனது பயணத்தைத் தொடர்ச்சியாக மீள்நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் வலுசக்திஇ துறைமுகங்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட உலகளாவிய போக்குகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய துறைகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் புற அதிர்வுகளுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையில் நாட்டின் பின்னடைவைத் தாங்கும் திறனைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் புரிந்து கொண்ட அவர்கள்இ இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வர்த்தகம் முதலீடுகளை ஈர்த்தல் சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியும் சமூகப் பாதுகாப்பும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்றும், இவை தனித்தனியாக வெற்றிபெற இயலாதவை என்றும் குறிப்பிட்ட பிரதமர் இந்தச் சமநிலையை அடைவதற்கு குறிப்பாகக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு போன்ற துறைகளில் வலுவான பொது உட்கட்டமைப்பு தேவை என்பதையும் பயனுள்ள சேவை வழங்கலைப் பாதிக்கும் தற்போதைய மனிதவளப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் Sonali Jain-Chandra, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் Evan Papageorgiou, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதிMartha Woldemichael, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே. எம். ஏ. என். தௌலகல மத்திய வங்கியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: development priorities.'Harini AmarasooriyaInternational Monetary Fund (IMF)representatives
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

Next Post

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

Related Posts

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
Next Post
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: