தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை வேடத்தில் நடித்து வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ (Vishwanath & Sons) திரைப்படத்தின் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வௌியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வௌியிடப்பட்டுள்ள இந்தச் சிறப்பு போஸ்டரில், சூர்யா “சஞ்சய் விஸ்வநாத்” (Sanjay Vishwanath) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
போஸ்டரில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் கம்பீரமான லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் சூர்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துப் படக்குழுவினரால் வௌியிடப்பட்டுள்ள இந்தச் சிறப்பு போஸ்டர், சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
















