மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலங்கொட, மஹாவலதென்னவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவார்.
கடந்த 23ஆம் திகதி முதல் அந்தச் சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பாக அவரது தந்தை பாலங்கொட பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இருப்பினும், இது கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கியதா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (25) பாலங்கொட மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














