தம்பகல்லவின் குடா ஓயா பகுதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பதுளுவெலவைச் சேர்ந்த 45 வயதுடையவராவார்.
இறந்தவர் மேலும் சிலருடன் இங்கினியகல குளத்தில் மீன்பிடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தம்பகல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












