இன்று காலை (03) ரத்கம பொலிஸ் பிரிவில் உள்ள ஓவகந்த சந்திப்புக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு கொள்கலன் கரையொதிங்கியுள்ளது.
கேள்விக்குட்பட்ட அந்தக் கொள்கலன், சுமார் 40 அடி நீளமுள்ள ஒரு வெள்ளைக் கொள்கலன் என்று ரத்கம பொலிஸ் தெரிவித்துள்ளது.
இது அண்மையில் கப்பலிலிருந்து கவிழ்ந்த கொள்கலனாக இருக்கலாம் என்று பொலிஸ் சந்தேகிக்கிறது.
இதற்கிடையில், நேற்று (02), இந்துருவ பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதிக்குப் பின்னாலுள்ள கடற்கரையில் ஒரு வெள்ளைக் கொள்கலன் கரையொதுங்கியது.
நேற்று காலை இவ்வாறு கரையொதுங்கிய இந்தக் கொள்கலன், அண்மையில் கொழும்புக்கு அருகிலுள்ள கடலில் ஒரு கப்பலிலிருந்து கவிழ்ந்த வெற்று கொள்கலனாக இருக்கலாம் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது.














